பம்பலபிட்டி பிரபல முஸ்லிம் வர்த்தகர் குறித்து CCD ஆரம்ப கட்ட விசாரணை.. (Update)

கொழும்பு -பம்­ப­ல­ப்பிட்டி, கொத்­த­லா­வல மாவத்­தையில் உள்ள தனது வீட்டின் பிர­தான நுழை­வாயில் அருகே வைத்து பிர­பல கோடீஸ்­வர முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் ஞாயிறன்று கடத்தப்பட்டிருந்தார்.

வேன் ஒன்றில் வந்த அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரி­களால் நேற்று முன்தினம் நள்­ளி­ரவு வேளையில் இக்­க­டத்தல் இடம்­பெற்­றுள்­ள­தாக அப்பிரதேசத்திற்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடத்­தப்பட்ட இளம் கோடீஸ்­வர வர்த்­த­க­ரான மொஹம்மட் சகீப் சுலைமான்(வயது 29) என்­ப­வரின் மனைவி பம்­ப­ல­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ள­தா­கவும் குறித்த அந்த முறைப்­பாடு மீதான மேல­திக விசா­ர­ணை­களை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் (CCD) சிறப்பு பொலிஸ் குழு முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.

குறித்த இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

நேற்று முன் தினம்(21) நள்­ளி­ரவு வேளையில் பிர­பல உண­வகம் ஒன்றில் சேர்ந்து உணவருந்தி­விட்டு மொஹமட் சகீப் சுலைமான் எனும் வர்த்­தகர் பம்­ப­லப்­பிட்டி கொத்­த­லா­வல மாவத்­தையில் உள்ள தனது வீட்­டுக்கு சென்­றுள்ளார்.

வீட்டின் அருகே சென்­றுள்ள அவர் வீட்டின் பிர­தான வாயிலை திறக்­கு­மாறு மனை­விக்கு தொலை­பே­சியில் தனது காருக்குள் இருந்­த­வாறே அறி­வித்­துள்ளார்.

இதன்­போது வீட்­டுக்குள் இருந்து வெளியே வந்­துள்ள மனைவி பிர­தான வாயிலை திறந்­துள்ளார். திறக்கும் போது, காரில் இருந்த தனது கண­வ­ரான வர்த்தகரை வேனொன்றில் வந்த அடை­யாளம் தெரி­யாத நபர்கள் கடத்திக் கொண்டு செல்­வதை தான் கண்­ட­தாக மனைவி நேற்றையதினம்(22) பம்­ப­லப்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்ளார்.

இந்த விடயம் குறித்து விசா­ர­ணைகள் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்க, கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பாலித்த பணா­மல்­தெ­னிய ஆகி­யோரின் மேற்­பார்­வையில் பம்­ப­லப்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழான குழு­வொன்­றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனை விட இது குறித்து சிறப்பு விசா­ரணை செய்யும் பொறுப்பு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த டி சொய்சாவின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சந்­தி­ர­தி­லக, மற்றும் அதன் பொறுப்­ப­தி­காரி நெவில் டி சில்வா ஆகி­யோரின் கீழான சிறப்புக் குழுவிடம் கைய­ளிக்­கப்பட்­டுள்­ளது.

நேற்று மாலை வரை­யி­லான விசா­ர­ணை­களில் கடத்­த­லுக்­கான கார­ணமோ, கடத்தல் காரர்கள் யார் என்­பதோ தெரி­ய ­வந்திருக்­க­வில்லை. எவ்­வா­றா­யினும் கடத்தல் காரர்­க­ளுடன் குறித்த வர்த்­தகர் போரா­டி­யுள்ள­மைக்­கான தட­யங்­களை குற்றத் தடுப்புப் பிரி­வினர் கண்­ட­றிந்­துள்­ளனர்.

அதன்­படி வர்த்­த­கரின் கைக்­க­டி­காரம் கடத்தல் இடம்­பெற்ற இடத்­தி­லி­ருந்து மீட்க்கப்படுள்ளதுடன் அவ்­வி­டத்தில் போராடும் போது வர்த்­த­க­ருக்கு ஏற்­பட்ட காயத்­தி­லி­ருந்து சிந்­தி­யி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கத்­தக்க இரத்தக் கறை­க­ளையும் பொலிஸார் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

குற்றத் தடுப்புப் பிரிவின் மேல­திக விசா­ர­ணை­களில், விசா­ர­ணை­க­ளுக்கு தேவையான மேல­திக தக­வல்கள் சிலவும் கிடைக்கப் பெற்­றுள்­ளன.

குறித்த வர்த்­தகர் வெளிநாட்­டி­லி­ருந்து உடை­களை இறக்­கு­மதி செய்யும் பிர­தான இறக்குமதியாளர் என கூறும் பொலிஸார் குறித்த வர்த்­த­க­ருக்கு பலர் மோசடி செய்­துள்­ள­தா­கவும் அது தொடர்பில் அவ்­வர்த்­தகர் குற்றப் புல­னாய்வுப் பிரிவு மற்றும் மோசடி தடுப்புப் பிரிவு ஆகி­ய­வற்றில் நான்கு முறைப்­பா­டு­களை செய்துள்ளதாகவும் மேலும் தெரி­ய­வந்­துள்­ளது.