பம்பலப்பிட்டியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து…

கொழும்பு – பம்பலப்பிட்டிய பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று(21) அதிகாலை பரவிய தீயினால், 2 மாடிக் கட்டடம் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதணி மற்றும் பைகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்திலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.

சம்பவ இடத்திற்கு 13 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததுடன், தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.