பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி இரவு 11 மணியவில் வர்த்தகர் மொஹமட் சுலைமான், இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டிருந்தார்.
அதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி மாலை மாவனெல்ல,ஹெம்மாதகம வீதியிலுள்ள யுகுலகல பிரதேசத்திலிருந்து இனம்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.