(FASTNEWS | COLOMBO) – பயங்கரவாதிகளைத் தோற்கடிக்க வேண்டுமாயின் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமை மிகவும் முக்கியம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் டுங் லாய் மார்கு தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய தினம் நேற்று (09) கொண்டாடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில் இவ்விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
“ஐரோப்பிய தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில், இலங்கை மக்களுடன் நாம் என்றும் ஒற்றுமையுடன் இருப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறிப்பாக ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் பிரஜைகள் உள்ளிட்ட அனைவரையும் இந்நாளில் நினைவு கூருகிறோம். ஒரு புனித நாளில், நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், சுதந்திரத்தின் தாற்பரியம் மற்றும் வழிபடுவதற்கான உரிமைக்கு எதிரான செயற்பாடுகளாகும்.
இலங்கை தனது தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தத் தாக்குதல் பிரதிபலித்துள்ளது. ஐரோப்பாவும் இந்தச் சவாலை எதிர்கொள்கின்றது..” என்றார்.