பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புப்படாத நபர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்தி, பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புப்படாத நபர்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, சமய நிகழ்வுகள் மற்றும் மக்கள் சந்திப்புக்கள் இடம்பெறும் இடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது என ஜனாதிபதி இதன் போது தெளிவுப்படுத்தினார்.