பயணிகளை சுமந்து சென்ற யானை மாரடைப்பால் திடீர் உயிரிழப்பு

கம்போடியாவில் உல்லாசப் பயணிகளை சுமந்து சென்ற யானையொன்று திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளது. கடும் வெயிலுக்கு மத்தியில் பணியாற்றிய நிலையில் இந்த யானைக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது

சம்போ எனப் பெயரிடப்பட்ட இந்த யானை கம்போடியாவின் ஆங்கோர் எலிஃபன்ட் கம்பனி எனும் நிறுவனத்துக்காக கடந்த 15 வருடங்களாகப் பணியாற்றி வந்தது.

 

அண்மையில் ஆலயமொன்றில் உல்லாசப் பயணி களை சுமந்து செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த யானை திடீரென மயங்கி வீழ்ந்தது.  சுமார் 40 பாகை செல்சியஸ் வெப்பமான சூழலில் 40 நிமிடங் களாக இந்த யானை பணியாற் றிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

மிருக வைத்தியர் ஒருவர் இது தொடர்பாகக் கூறுகையில், அதிக வெப்பம் மிகுந்த சூழலில், தன்னைக் குளிர்த்துக்கொள்வதற்கு உதவக்கூடிய காற்று இல்லாத நிலையில் இந்த யானைக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். இந்த யானை உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப் பட்டுள்ளது.