பயணிகள் பேருந்து மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்…

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து மீது இன்று(23) அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

​கொடகாவல – பல்லபெத்த பிரதேசத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பேருந்தின் சாரதி படுகாயமடைந்து எம்பிலிபிட்டிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட விரோதமே இத்தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.