பயணிகள் பேரூந்து கால்வாயில் கவிழ்ந்ததில் 2 பேர் பலி 44 பேர் வைத்தியசாலையில்..

இரத்தினபுரி ஹம்பிலிபிட்டிய பிரதான வீதியில் இரத்தினபுரி பத்துல்பஹன பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் தனியார் பேரூந்து ஒன்று கவிழ்ந்து பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த இந்த விபத்தில் பெண் ஒருவர் உட்பட 02 பேர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஊறுபொக்கையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி இருந்து.

இன்று அதிகாலை 3.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களில் 16 பெண்களும் 09 சிறுவர்களும் உள்ளடங்குவதாக இரத்தினபுரி வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறினார்.

விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் சுமார் 60 பயணிகள் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

####