(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இலங்கைக்குள் வரமுடியாது என்ற பயணத்தடை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் இந்த பயணத்தடையினை நீட்டிப்பதாக சிவில் விமான சேவைகள் பணியகம் அறிவித்துள்ளது.
எனினும் குறித்த காலப் பகுதியில் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு பயணிகள் அவர்களின் நாடுகளுக்கு பயணிக்க வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என கூறியுள்ள போதிலும் பயணிகள் தமது நாடுகளுக்கு செல்ல ஒரு நாளைக்கு ஆறு மணி நேர கால அவகாசமே விமான நிலையத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் சிவில் விமான சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.