அண்மையில் வடக்கின் சில மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக, பயிர் நிலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் மதிப்பீடு செய்யும் பணிகள் நாளை(08) ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளில் விவசாய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் காப்புறுதி அதிகாரிகளும் ஈடுபடுவர் என்று விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி று.ஆ.வீரக்கோன் தெரிவித்தார்.
உர நிவாரண திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏற்கனவே காப்புறுதி திட்டத்தில் இணைந்து கொண்டமையினால் அதனூடாக நட்டஈட்டு கொடுப்பனவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு. வீரகோன் தெரிவித்தார்.
இதன்படி, ஒரு ஹெக்டெயர் பயிர் நிலத்திற்கு 40 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.