பயிற்சிகள், அதிகாரிகள் மற்றும் வீரர்களது பிழைகள் குறித்து டில்ஷான் தேசிக்காய் வெட்டு…

வர்த்தக சேவைகளுக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தேசிய அணி வீரர்கள் மிகவும் முக்கியம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் டீ.எம்.டில்ஷான் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே பயிற்சிகளை விட குறித்த போட்டியில் கலந்து கொள்வதே முக்கியம் எனவும் அதிகாரிகள் வீரர்களை ஊக்கப்படுத்துவதில்லை என கவலை தெரிவித்துள்ளார்.

வர்த்தக சேவை கிரிக்கெட் போட்டியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு தொடர்ந்தும்கருத்துத் தெரிவிக்கையில்;

“நாம் தேசிய அணியில் விளையாடும் போது சில சமயம் நேரடியாக எயார் போர்ட் வந்து வர்த்தக சேவை கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் நாட்களும் எமக்கு இருந்தது. மாவட்டடங்களை விட இந்த போட்டியானது மிகவும் சிறந்ததொன்று.. அனைவரும் தேசிய அணியில் உள்ள வீரர்களே விளையாடுவார்கள், மிகவும் சிறந்ததொரு போட்டி, மிகவும் கவலையளிக்கிறது சில வீரர்கள் இதில் விளையாடுவதில்லை, இது குறித்து அநேகமானோரிடம் வினவினேன்.., அவர்கள் உபாதைக்கு உள்ளாகும் என்ற பயத்தினால் விளையாட வேண்டாம் என்று கூறியுள்ளனராம்… சில வீரர்கள் பயிற்சிகளுக்கு வந்து, 10 அல்லது 15 பந்துகள் வீசுகிறார்கள்.. எனக்குப் புரியவில்லை… என்ன நடக்குதுன்னு… வீரர்களும் விரும்புவது முகாமைத்துவம் கூறுமானால் விளையாட தயார் என்ற நிலையிலேயாகும்.. அவர்கள் இப்போது இலகுவிற்கு தான் விரும்பியுள்ளனர்.நான் நினைக்கிறேன் இதனை நிறுத்த வேண்டும் என்பதே..”