(FASTNEWS | COLOMBO) – அம்பாறை உகண விமானப்படை முகாமைச் சேர்ந்த விமானப்படை வீரர் ஒருவர் விமான சாகச பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பரசூட் செயலிழந்தமையால், கீழே விழுந்து உயிரிழந்த விமானப்படை வீரரின் இறுதிக் கிரியைகள் இன்று(22) மாலை இடம்பெறவுள்ளது.
கடந்த 20ம் திகதி பரசூட் மூலம் விமான சாகசப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரரொருவர் சுமார் 7000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.