(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலுக்காக 2014 ஆம் ஆண்டின் இறுதி நேரத்தில் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் போன்று, இந்த வருடம் இடம்பெறும் எனவும் ஜனாதிபதித் தேர்தலிலும் இறுதி நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிரடி காட்டும் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இப்போதே முடிவை வெளியிடாது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இறுதி நேரத்தில் இடம்பெற்றதைப் போன்று, அதிரடியான முடிவை எடுக்கும் என்றார்.
இந்த கருத்தின் மூலம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.