ஆசிய கோப்பை 2018க்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று(24) வெளியிட்டுள்ளது. அதில் செப்டம்பர் 19ம் திகதி பரம எதிரிகளாக கிரிக்கெட் வரலாற்றில் பதியப்பட்டுள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.
இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பிடித்துள்ளன.
முதல் போட்டி செப்டம்பர் 15-ம் திகதி நடைபெறுகிறது. இதில் இலங்கையும் வங்காளதேசமும் மோதுகின்றன. இந்தியா தனது பரம எதிரியான பாகிஸ்தானுடன் செப்டம்பர் 19-ம் திகதி மோதுகிறது.
இரு பிரிவிலும் முதல் இரு இடங்கள் பெறும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அவற்றில் இருந்து இரு அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படும். இறுதி போட்டி செப்டம்பர் 28-ம் திகதி துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.