தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இராணுவ அதிகாரி கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்டதாகவும், பின்னர் இராணுவத்தில் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த இந்த இராணுவ அதிகாரி கிரித்தலே முகாமில் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.