அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியான பராக் ஒபாமாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அனுபவத்துக்குரிய பல அரிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
அவருடைய அரசியல் மற்றும் ஆட்சியை கடந்த சில உண்மைகள் நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
விருதுகள் பெற்ற பெருமை
சிறந்த வார்த்தைகள் பேசும் ஆல்பத்திற்குரிய கிராமி விருதுகளை இரண்டுமுறை பெற்ற உணர்வுப்பூர்வமான சிந்தனையாளர்.
முதல்முறையாக, பிப்ரவரி 2006 ல் ” Dreams from my Father ” என்ற சுருக்கப்பட்ட ஒலி புத்தகத்திற்காகவும், இரண்டாவது முறையாக பிப்ரவரி 2008 ல் “Audacity of Hope” என்ற ஒலி புத்தகத்திற்காகவும் அந்த விருதை பெற்றார்.
ஹாரிபாட்டர் கதை தொடரில் உள்ள ஒவ்வொரு தனி புத்தகங்களையும் தன் மகள் மாலியாவுடன் கலந்து படித்திருக்கிறார்.