க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பவற்றுக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் விடை எழுத வழங்கப்படும் கால அளவை 10 நிமிடங்களால் அதிகரிக்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்துள்ளார்.
இதன்படி, 03 மணித்தியாலங்களைக் கொண்ட வினாப் பத்திரத்துக்கு 10 நிமிட நேரம் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் ஆகியோரை கலந்தாலோசனை செய்தே குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.