பரீட்சைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்…

பாடசாலை மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாதவாறு பொதுத் தேர்தல் நடத்தப்படுமென கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றமும் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரும் இணைந்து செயற்பட முடியவில்லை என்றால் ஆட்சியாளர்கள் இவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ள அதிகாரம் உண்டு என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இதேவேளை, நிலையான அரசாங்கமொன்றை அமைப்பதற்கு மக்களுக்குள்ள உரிமைக்கு இடமளித்து பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதி தீர்மானித்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.