உயர் தரப் பரீட்சை நிலையங்களுக்கு, மேலதிகமாக ஒரு நிலையப் பொறுப்பதிகாரியாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியொருவரை சேவையில் அமர்த்த பரீட்சைகள் திணைக்களம் முன்னெடுத்துள்ள தீர்மானத்துக்கு கல்வித் துறையிலுள்ள சகல தொழிற்சங்கங்களும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில், அனைத்து தொழிற்சங்கங்களினதும் வேண்டுகோளின் பேரில் 13 தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (02) பரீட்சைகள் ஆணையாளருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயர் தரப் பரீட்சைக்கு 2268 மேலதிக நிலையப் பொறுப்பதிகாரிகளை நியமிக்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
R.Rishma