இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு முறைகேடாக தோற்றிய இரண்டு மாணவர்கள் லுனுகலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
லுனுகலை மகா வித்தியாலயத்தில் தனியார் பரீட்சார்த்திகளாக தோற்றிய மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் பரீட்சை சுட்டெண்களை மாற்றி பரீட்சை எழுத முற்பட்டுள்ளதாக பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பாடசாலைக்கு சென்ற பொலிசார், அடையாள அட்டை மற்றும் பரீட்சை அனுமதி பத்திரங்களை மாற்றி பரீட்சைக்கு தோற்றிய இருவரையும் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
17 மற்றும் 18 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் இன்று(15) பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.