பாடசாலை மாணவர்களது பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான தினம் ஒன்றை பிரகடனப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டுக்கான அப்பியாச புத்தகங்களை கையளிக்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வருடம் கல்வியை மீளமைப்பு செய்யும் வருடமாகும். எனவே அதற்காக பல முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதில் ஒரு கட்டமாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான தினம் ஒன்றை வெகு விரைவில் பிரகடனப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.