பருக்கள் மறைந்த பின்பும் சிகப்பு நிறத் தழும்பு இருக்கிறதா? அப்போ இப்படி ட்ரை பண்ணுங்க…

முகத்தில் தோன்றிடும் பருக்களால் பலருக்கும் சிரமங்கள் உண்டு. அசிங்கமாகத் தெரிவதும் வலி இருப்பதும் மட்டுமல்ல பரு மறைந்தாலும் அதனுடைய தழும்புகள் மறையாமல் இருக்கும்.

எவ்வளவோ முயற்சித்தும் பருக்களின் தழும்புகள், குறிப்பாக சிவந்த வீக்கம் குறையாமல் இருக்கும். அதன் தழும்புகள் போக்க விரிவான தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உடல் காரணங்கள் : சில நேரங்களில் நாம் முகத்தை முறையாக பராமரித்தாலும் சிலருக்கு பருக்கள் தோன்றுவதுண்டு, இதற்கு காரணம் உங்கள் உடலில் சிபாசியஸ் சுரப்பி அதிகமாக சுரப்பது தான். இது ஓவர் ஆக்டிவாக இருந்தாலும் நம் முகத்தில் பருக்கள் உண்டாகும். குறிப்பாக பருவ வயதில், மாதவிடாய் காலங்களில் இந்த சுரப்பி அதிகமாக சுரக்கும். அதனால் பெண்களுக்கு சரியாக பருவ வயது வரும் போது முகத்தில் பருக்கள் உண்டாகிறது.

பின் விளைவுகள் : இந்த சிபாசியஸ் சுரப்பி முகத்தில் தான் அதிகமாக இருப்பதால் பருக்களும் பெரும்பாலும் முகத்திலேயே தோன்றுகிறது. பருக்களில் பல வகைகள் இருக்கின்றன. சிலருக்கு மிகச்சிறிய அளவில் இருந்தாலும் சிவந்திருப்பது,அப்பகுதியில் அதிகமாக எரிச்சல் உண்டாவது, தொட்டால் வலி ஏற்படுவது, அல்லது வீக்கம் என பிற தொல்லைகலும் சேர்ந்தே இருக்கும்.

சிகப்பு அடையாளம் : பெரும்பாலும் பருக்கள் சிகப்பு நிறத்தில் இருக்கும். அதன் நிறத்தைப் பொருத்து அதனுடைய தன்மையை நாம் அறிந்து கொள்ளலாம். சில தினங்களில் பருக்கள் மறைந்தாலும் இந்த சிகப்பு திட்டுப் போல நம் முகத்தில் அப்படியே அடையாளமாக மாறிடும். சில தினங்களில் இந்த சிகப்பு அடையாளம் தானாக மறைய வேண்டும் அப்படி மறையவில்லையெனில் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிற மிக எளிமையான வீட்டு மருத்துவத்தைப் பின்பற்றி அந்த தழும்பை நீங்கள் எளிதாக போக்கிடலாம்.

பயன்படுத்தும் முறை :
வெதுவெதுப்பான நீரில் டீ பேகை சில நிமிடங்கள் மூழ்கச் செய்திடுங்கள். பின்னர் அந்த பேக்கை வெளியே எடுத்து விடலாம். அந்த தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். அதற்கு முன்னதாக நீங்கள் வெளியே எடுத்திருக்கும் டீ பேகை அப்படியே உங்களுக்கு தொல்லை தந்து கொண்டிருக்கும் பருக்களின் மீது பத்து நிமிடம் வரை வைதிருக்கவும்.

எலுமிச்சை சாறு :
இது மிகச்சிறந்த நிவாரணி என்றே சொல்லலாம். அதோடு இது எளிதாக கிடைக்கவும் செய்திடும் என்பதால் நீங்கள் உடனடியாக இந்த முறையை சோதித்துப் பாருக்கலாம். ஆனால் கவனம், இதில் சிட்ரிக் அமிலம் நிறைந்திருக்கிறது. அதனால் சருமத்தில் சில நேரங்களில் அதிக எரிச்சல் உண்டாகலாம். ஏற்கனவே பரு இருக்கும் இடத்தில் எரிச்சல் இருந்தால் எலுமிச்சை சாறு பயன்படுத்த வேண்டாம்.

ஐஸ் க்யூப் :
வீக்கம் இருந்தால் அங்கே ஐஸ் கட்டி வைப்போம். அதே போல சருமத்திற்கும் அதனைப் பயன்படுத்தலாம். வீக்கமுள்ள பருக்கள் உள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியும் ஐஸ் கட்டியைக் கொண்டு லேசாக ஒத்தடம் கொடுங்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், பருக்கள் மற்றும் அதன் தடங்கள் உடனடியாக மறைந்திடும். நீண்ட நேரம் ஐஸ் கட்டியை முகத்தில் வைத்திருக்க வேண்டாம் கவனம்.

டூத் பேஸ்ட் :
இது மிகவும் எளிதான ஒன்று. அதிகம் கெமிக்கல் சேர்க்காத டூத் பேஸ்ட் இதற்கு பயன்படுத்துங்கள். பேபி டூத் பேஸ்ட் என்றால் பெஸ்ட். பொதுவாக டூத் பேஸ்ட்களில் ட்ரைக்ளோசன், பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரோஜன் பெராக்சைட் இருக்கிறது

ட்ரைனஸ் :
டூத் பேஸ்ட்டை பரு இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காய்ந்ததும் கழுவிடலாம். இது பருக்களை உடனடியாக மறைத்திடும். சாதரண டூத் பேஸ்ட் பயன்படுத்துங்கள் ஜெல் பேஸ்ட் பயன்படுத்த வேண்டாம்.

கற்றாழை :
இதில் ஏராளமான ஆண்டிசெப்டிக் மற்றும் ஆண்ட்டி இன்ஃபலமேட்டரி துகள்கள் இருக்கின்றன. பருக்கள், அதனால் ஏற்படுகிற வீக்கம்,எரிச்சல் போன்றவற்றை போக்க இந்த கற்றாழை ஜெல்லை அப்படியே முகத்தில் எடுத்து தடவலாம். இது தழும்பினை போக்குவதுடன், உங்கள் சருமத்தையும் பொலிவாக காட்டிடும்.