பருக்கள் விட்டுச் சென்ற கருமையான தழும்புகளைப் போக்கும் சில எளிய வழிகள்…

ஒருவரது முகத்தில் பருக்கள் இருந்தால், அது அவர்களது தோற்றத்தையே அசிங்கமாக காட்டும். இப்படி முகத்தில் அதிக பருக்கள் வருவதற்கு காரணம், சரும வகை மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை போன்றவை தான்.

ஒருவரது முகத்தில் பருக்கள் வந்தால், இதை அப்படியே உடைத்து துடைத்துவிடுவார்கள் ஆனால் இப்படி செய்தால், ஒருவரது முகத்தில் பருக்களின் கருமையான தழும்புகள் இருந்து, அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிகளைப் பின்பற்றுங்கள். விரைவில் பருக்களால் வந்த தழும்புகளை முற்றிலும் மறைத்துவிடலாம்.

பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, கருமையான பருத் தழும்புகளின் மீது தடவி உலர வைத்துக் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்தால், விரைவில் பருக்கள் விட்டுச் சென்ற தழும்புகள் மறையும்.

உப்பு:’
உப்பைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், அது பருக்களை பரவ விடாமல் தடுக்கும். அதற்கு உப்பை நீரில் கலந்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து நீரால் அப்பகுதியைத் தேய்த்து கழுவுங்கள்.

பூண்டு:
உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் எளிதில் உடையும் வகையில் இருந்தால், பூண்டு பயன்படுத்துங்கள். அதற்கு சிறிது பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து, பருக்களின் மீது தடவி 2-3 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதனால் பருக்கள் மட்டுமின்றி, தழும்புகளும் நீங்கும்.

முட்டை வெள்ளைக்கரு:
முட்டையின் வெள்ளைக்கரு சருமத் துளைகளை ஆழமாக சுத்தம் செய்யும் அற்புதமான பொருளாகும். ஒருவர் முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு, தழும்புகளும் மறைந்து, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, முகம் பிரகாசமாகவும், பளிச்சென்றும் காணப்படும். அதிலும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, மாஸ்க் போட சிறப்பான பலன் கிடைக்கும்

க்ரீன் டீ:
க்ரீன் டீயை போட்ட பின், அதன் இலைகள் அல்லது க்ரீன் டீ பையை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு காலை, மாலை என இரு வேளை செய்து வந்தால், பருக்கள் மட்டுமின்றி தழும்புகளும் மறையும்.