பருத்தித்துறை நகர சபையின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஜோசப் இருதயராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது தலைவர் தெரிவிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஜோசப் இருதயராஜா மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட க.பாலசுப்ரமணியம் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதனையடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் ஜோசப் இருதயராஜா 07 வாக்குகளையும், க.பாலசுப்ரமணியம் 06 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் பருத்தித்துறை நகர சபையின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஜோசப் இருதயராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, பிரதி தலைவராக மதினி நெல்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.