பரோல் முடிவடைந்து மீண்டும் சிறை செல்கிறார் சசிகலா…

5 நாள் பரோல் முடிவடைந்ததையடுத்து சசிகலா இன்று(12) மீண்டும் பெங்களூரு சிறைக்கு திரும்புகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது கணவர் நடராஜனை கவனிப்பதற்காக சசிகலாவுக்கு கடந்த வாரம் 5 நாட்கள் பரோல் வழங்கி பெங்களூரு சிறைத்துறை உத்தரவிட்டது.

இதேவேளை,அவரது பரோல் காலம் முடிவடைந்ததால் இன்று(12) மாலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சசிகலா திரும்புகிறார்.