பற்களின் மேலுள்ள வெள்ளை திட்டுகளை போக்கும் இலகு வழி…

நமது பற்கள் தான் நமது சிரிப்பை மிக பிரகாசமானதாக சுட்டி காட்டும். இந்த பற்கள் மஞ்சளாகவோ, வெள்ளை படிந்த திட்டுகள் போன்றோ, கருப்பாகவோ, சொத்தைகள் கொண்டோ இருந்தால் அவ்வளவு தான்.

குறிப்பாக பற்களின் முன்பகுதியில் இது போன்று இருப்பது தான் இந்த மோசமான பாதிப்புக்கு காரணம். வாங்க, பற்களில் உள்ள வெள்ளை திட்டுகளை அகற்றும் வீட்டு வைத்தியத்தை இனி தெரிந்து கொள்வோம்.

எண்ணெய்:
பொதுவாக எண்ணெய்யை கொண்டு வாய் கொப்பளித்தால் அது பலவித பயன்களை நமக்கு தரும். குறிப்பாக தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் மிக சிறந்த மருந்தாக வேலை செய்யும். தினமும் 10 நிமிடம் 2 ஸ்பூன் இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் வெள்ளை திட்டுகளை எளிதாக அகற்றி விடலாம்.

எலுமிச்சை:
மிக விரைவிலே இந்த வெள்ளை திட்டுகளை நீக்க இந்த குறிப்பு நன்கு உதவும். 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் சிறிது உப்பு கலந்து பற்களில் தேய்த்தால் வெள்ளை திட்டுகள் மறையும். இதற்கு காரணம் இதிலுள்ள சிட்ரிக் அமிலம் தான். அத்துடன் வாய் துர்நாற்றத்தையும் இது குணப்படுத்த கூடும்.

கால்சியம் கொண்ட உணவுக;ள்
பற்களில் இது போன்று வெள்ளை திட்டுகள் வருவதற்கு தாதுக்கள் குறைபாடும் ஒரு முக்கிய காரணம். குறிப்பாக கால்சியம் குறைபாடு தான். எனவே பால், யோகவர்ட் போன்றவற்றையும், மெக்னீசியம் நிறைந்த மீன், நட்ஸ்கள், பச்சை கீரைகள் போன்றவற்றையும் உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

மஞ்சள்:
1/2 ஸ்பூன் மஞ்சளை எடுத்து கொண்டு அவற்றுடன் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை பயன்படுத்தி பல் துலக்கினால் விரைவிலே வெள்ளை திட்டுகள் மறைந்து, அழகான பற்கள் உங்களுக்கு கிடைக்கும்.

* நமது பற்கள் அதிக ஆரோக்கியாயத்துடன் இருக்க வேண்டுமென்றால் நிச்சயமாக நீங்கள் தினமும் 2 வேளை பல் துலக்க வேண்டும். இல்லையென்றால் உங்களின் பற்கள் பலவித பாதிப்புகளை சந்திக்க நேரிடும். மேலும், சொத்தை, வெள்ளை திட்டுகள், மஞ்சள் பற்கள் போன்றவையும் ஏற்ப்பட கூடும்.