பற்களுக்கு பின்னால் இருக்கும் மஞ்சள் கரையானது, மினரல் உப்புகள், சாப்பிட்ட உணவின் மீதி மற்றும் சில பொருட்களால் உண்டாகிறது. இது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது மற்றும் பற்களை சொத்தையாக்குவது மட்டுமில்லாமல், சிலவகையான தொற்றுக்களுக்கும் காரணமாக அமைகிறது
நீங்கள் இந்த கரைகளுக்கு மிக அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகமிக அவசியம். இதனை போக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இவை பற்களுக்கு பின்னால் உள்ள கரைகளை எளிதில் போக்க உதவுகிறது
கிராம்பு:
இது உங்களது வாய் துர்நாற்றம் மற்றும் தொற்றுகளை தடுக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
அரை டீஸ்பூன் கிராம்பு
1 கப் தண்ணீர்
செய்முறை : முதலில் கிராம்பை தண்ணீரில் போட்டு 20 நிமிடங்கள் வரை கொதிக்க விட்ட நீரை கொண்டு ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.
கடுகு எண்ணெய்;
இது வாய்துர்நாற்றம் மற்றும் தொற்றுகளை நீக்க கூடிய தன்மை உள்ளது. இந்த கடுகு எண்ணெய்யானது, ஈறுகளை வலியாக்கவும், பற்களை சுத்தம் செய்யவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
1 டீஸ்பூன் கடுகு எண்ணெய்
அரை கப் தண்ணீர்
செய்முறை:
கடுகு எண்ணெய்யை வெதுவெதுப்பான நீரில் இட வேண்டும். இந்த கலவையை கொண்டு வாயை நனைக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு பஞ்சினால், இந்த நீரை தொட்டு, ஈறுகளை துடைக்கலாம்.
உப்பு:
உப்பு நீரை கொண்டு வாய் கொப்பளிப்பது பற்களின் பின்புற கரைகள், பாக்டிரியா, வாய்துர்நாற்றம் போன்றவற்றை தடுக்கும். இது தொற்றுகளை தடுக்கிறது.
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாற்றில் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. இது பற்களில் உள்ள மஞ்சள் கரைகளை வெண்மையாக்கவும், துர்நாற்றத்தை போக்கவும் உதவுகிறது
தேவையான பொருட்கள்:
தண்ணீர் – கால் கப்
எலுமிச்சை – பாதி
செய்முறை:
தண்ணீரை சூடு செய்து, எலுமிச்சை சாறை சேர்க்க வேண்டும். இந்த தண்ணீரால் ஒரு நிமிடம் வரை ஒருநாளைக்கு ஒருமுறை வாய் கொப்பளிக்க வேண்டும்.