பல்கலைக்கழக மாணவர்களால் அரசுக்கு சிவப்பு சமிஞ்சையுடன் சூளுரை.

மாலபே SAITM தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கையெழுத்து வேட்டையும் துண்டுப்பிரசுரம் வழங்கும் செயற்பாட்டையும் மருத்துவ பீட மாணவர்கள் முன்னெடுத்துள்ளார்கள்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று குறித்த செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டவர்கள், கருத்து தெரிவிக்கையில், மாலபே SAITM தனியார் பல்கலைக்கழகத்திற்கு அரசு அனுமதியளித்தமையை கண்டித்தும், இதை உடனடியாக தடைசெய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்கள்.

மேலும், அரசுக்கு இவர்கள் எச்சரிக்கை விடுப்பதாகவும், மருத்துவ பீட மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்குமாறும் தெரிவித்து இந்த கையெழுத்து வேட்டை மற்றும் துண்டுப்பிரசுரம் விநியோகிப்பதாகவும், அரசு இதை கண்டுகொள்ளா விட்டால் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டி வரும் எனவும் இவர்கள் கூறினார்கள்.