(FASTGOSSIP|COLOMBO) – பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தரம் 06 முதல் உயர்தரம் வரையான மாணவர்களுக்கு, இரண்டாம் தவணைக்காக இன்று(06) பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கின்றன.
இதேவேளை, நாட்டில் உள்ள எந்த ஒரு பாடசாலைகளுக்கு அருகிலும் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், பலத்த பரிசோதனைகளுக்கு மத்தியில் மாணவர்கள் மற்றும் ஆசரியர்கள் பாடசாலை வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைகளுக்கு வரும் அலுவலக வாகனங்கள் மற்றும் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்துவதற்காக தனியான வாகன தரிப்பிடங்கள் மற்றும் மைதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதகாவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தரம் 01 – தரம் 05 வரையான மாணவர்களுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதியே பாடசாலையை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.