பலப்பிட்டிய ஜம்புவத்தை பிரதேசத்தில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் 10 பேர் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லொறி சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதையடுத்து, லொறி வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பெண்கள், மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.