அரசியலுக்குள் பிரவேசித்தது தொடக்கம் இன்று வரை தான் ஓய்வு எடுத்துக் கொண்டதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தன்னை ஓய்வுபெறச் செய்ய பலர் தனியாகவும் கொட்டாகவும் முயற்சி எடுத்த போதிலும், தான் அதற்கு தயார் நிலையில் இல்லை என அவர் கூறியுள்ளார்.
ஊவா பரணகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இக்கருத்தினை முன்வைத்தார்