பலஸ்தீன சிறைக் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக மஹிந்த கையொப்பம்..

பலஸ்தீன சிறைக் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் முன்னாள் ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ நேற்று(03) கையெழுத்திட்டார்.

பலஸ்தீன சிறைக் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் கையொப்பம் பெறும் வேலைத்திட்டம் ஒன்று தற்போது பலஸ்தீன் தூதரகத்தில் இடம் பெறுகின்றது.

பலஸ்தீன சிறைக் கைதிகள் தினம் ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் அதனை முன்னிட்டு இவ்வருடம் குறித்த தினத்திலிருந்து 1,500 பலஸ்தீன கைதிகள் சிறையிலுள்ள பலஸ்தீன் பாராளுமன்ற உறுப்பினர் மர்வான் பர்கூதி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் கையெழுத்து சேகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இக்கையொப்பம் பெறும் வேலைத் திட்டம் இன்றும் நாளை(05) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், கொழும்பு 07, இலக்கம் 110/10 விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பலஸ்தீன தூதரகத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கையிலுள்ள பலஸ்தீன ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொண்டு இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பலஸ்தீன சிறைக் கைதிகளின் போராட்டத்திற்கான ஒருமைப்பாட்டை தெரிவிக்குமாறும் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.

(rizmira)