பலாலி, தெலிப்பலை பிரதேசத்திலுள்ள 454 ஏக்கர் இடப்பரப்புள்ள காணியை அதன் உரிமையாளர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று(31) இடம்பெறவுள்ளது.
பலாலி இராணுவ முகாமினால் பாதுகாப்பு காரணங்களுக்காக அபகரிக்கப்பட்ட காணிகளே இவ்வாறு இன்று பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
இன்றைய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளதோடு, கீரிமலைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 100 வீடுகளும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு இன்று ஜனாதிபதியினால் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.