பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பம்

(FASTNEWS|COLOMBO) – இலங்கை மூன்றாவது பிராந்திய விமான நிலையமாக யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்பப் பணிகள் இன்று(05) போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்ளன.

ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்தியாவை மையப்படுத்தியதாக பிராந்திய சிவில் விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டம் முதலில் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த இந்த வேலைத்திட்டங்களுக்காக முதலீடு செய்யப்படும் 2,250 மில்லியன் ரூபாவில் 300 மில்லியன் ரூபாவை இந்தியா கடனுதவியாக வழங்குகின்றது.