பல்கலைக்கழக கல்வியின் தரத்தை உயர்த்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்வதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் ரணில் துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் துணைவேந்தர்களுடன் நடத்திய சந்திப்பு ஒன்றின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
பல்கலைக்கழகங்களின் கட்டிடங்களை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்காது, உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு சர்வதேச அளவில் காணப்பட்ட நன்மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.
மீளவும் நற்பெயரை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது துணைவேந்தர்களின் கடமையாகும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
#####