பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு 21 நாளாகவும் தொடர்கிறது…

பணிப்புறக்கணிப்பு தொடர்பில் நேற்று(19) இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த சங்கம் முன்னெடுக்கும் போராட்டத்தினை தொடர்ந்தும் 21 நாளாகவும் இன்றும்(20) தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 15 நாட்கள் கடந்துள்ள போதிலும் உயர்கல்விக்கு பொறுப்பான எந்த அதிகாரிகளும் தம்முடன் இது தொடர்பில் கலந்துரையாடவில்லையென சம்மேளனத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டின் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழுள்ள 15 அரச பல்கலைக்கழகங்கள், மூன்று வளாகங்கள் மற்றும் 18 உயர் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த கோரிக்கைகளுக்கு இன்று(20) தீர்வு எட்டப்படும் என நேற்று(19) உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.