பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்கள் கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று(06) முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் நாளை வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நாடாளாவிய ரீதியில் கல்வி சாரா ஊழியர்கள் தீர்மானம் மெற்கொண்டுள்ளனர் என பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒன்றிணைந்த குழுவின் தலைவர் எட்வட் மல்வத்தஹே தெரிவித்தார்.

இதற்காக 15 அரச பல்கலைக்கழகங்களதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ்வரும் உயர் கல்வி நிறுவனங்களது 15000 இற்கும் அதிக ஊழியர்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று(06) மற்றும் நாளை(07) ஆகிய இரண்டு தினங்களில் இடம்பெறவிருந்த கற்றல் செயற்பாடுகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றினூடாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.