பிரதான கோரிக்கைகள் 14 இனை முன்வைத்து பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளது சங்கம் இன்று(22) மற்றும் நாளை(23) தொடர்ச்சியாக அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் தயால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கையினால் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கீழ் நிர்வகிக்கப்படும் 15 பல்கலைக்கழகங்கள், 03 வளாகங்களில் மற்றும் 18 உயர்கல்வி நிறுவனங்களது நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பளப் பிரச்சினை மற்றும் ஏனைய கோரிக்கைகள் குறித்து கலந்துரையாட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வாய்ப்புக் கோரியும் அதற்கு இடம் வழங்கப்படவில்லை என குறித்த சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்திருந்தார்.
-Rishma