2017உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உட்சேர்க்கும் விண்ணப்பங்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக நுழைவுக் கையேடு வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, அதில் உள்ள தரவுகளுக்கு அமைய இணையத்தினூடாக இயங்கலை(Online) முறையில் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இன்று(05) முதல் ஜனவரி 26ம் திகதி வரையிலான காலப்பகுதியில் குறித்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் எனவும் குறித்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இம்முறை பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை 30,500. 2017ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கு 163,104 பரீட்சைதாரிகள் தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#reeshma