பல்கலை மாணவர்கள் மீ தான தாக்குதல் சம்பவம் குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு..

மாலபே, சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரால் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் குறித்த இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதாக, அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்த அறிக்கையை எதிர்வரும் வியாழக்கிழமை ஆணைக்குழு முன்னிலையில் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(rizmira)