‘பல்லுக்கு ஏன் யானை.. நாயொன்றே போதும்..’ fb இல் தலதா உன்னத பொருட்களுக்கு அவமதிப்பு .. பா.உறுப்பினர் பொலிசில்…

பெளத்த மதம் உள்ளிட்ட மதங்களை அவமதிக்கும் வகையில் மற்றும் இனவாதம் பேசும் சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே எழுத்துமூல முறைப்பாடு ஒன்றினை பொலிஸ்மா அதிபருக்கு கையளித்துள்ளார்.

புத்தரின் தாதுப் பொருட்களை அவமதிக்கும் வகையில் ‘ பல்லினை கொண்டு செல்ல ஏன் யானை.. நாய் ஒன்று இருந்தால் போதும்” என முகநூல் பக்கமொன்றில் குறித்து அவமதித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினரின் முறைப்பாட்டில் மேலும் தெரிவித்திருந்தார்.

‘இயேசு ரஸ்தியாது’ என்றும் குறிப்பிட்டுள்ளதாக குறித்த உறுப்பினரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகநூல் பக்கங்களை இயக்கும் நபர்கள் குறித்தும் உறுப்பினர் மேலும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.