பல்வேறு இடங்களில் புழுதிப் புயல் – பாடசாலைகளுக்கு விடுமுறை…

டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் புழுதி புயல் தாக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை காரணமாக டெல்லியில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால், மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
சாலையில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

20 மாநிலங்களில் மோசமான வானிலை நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து டெல்லியில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மிகுந்த எச்சரிக்கையுடன் புகையிரதம் இயக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

90 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் காற்று வீசினால், மெட்ரோ ரயில் சேவை நிறுத்திவைக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ராஜஸ்தானில் மீண்டும் புழுதிப் புயல் தாக்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.