(FASTNEWS|COLOMBO) அதிக சத்தத்துடன் எழுப்படுகின்ற பல்வேறு எச்சரிக்கை ஓசைகள் (ஹோன்) மற்றும் பல்வேறு வர்ணங்களைக் கொண்ட மின்குமிழ்களை ஒளிரவிட்டு செல்லும் பயணிகளின் பேரூந்துகளை முற்றுகை இடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாகன அலுவல்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.
பேரூந்துகள் மாத்திரம் அன்றி இவ்வாறான ஒலி எழுப்புகின்ற ஏனைய வாகனங்களுக்கு எதிராகவும் சட்டரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரஈவ்த்துள்ளார்.
இதேவேளை, வாகனங்களில் இவ்வாறான பாகங்களை பொறுத்துவது தொடர்பில் வாகன உரிமையாளர்களை போன்று சாரதிகளுக்கும் பொறுப்பு இருப்பதாக வாகன அலுவல்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.