நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல பிரதேசங்களில்
மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, கலவானை மற்றும் அயகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் கடந்த 24 மணித்தியாலங்களாக பெய்த கடும் மழையுடன் இவ்வாறு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட, புளத்சிங்கள, அகலவத்தை, மத்துகம, பதுரெலிய மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



