பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை….

வடக்கு , வடமத்திய , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஓரளவு மழைபெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு , சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ,திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையிலான ஆழமான கடற்கரை பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்று வீசக்கூடும் எனவும் இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.