பல மாகாணங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று(08) மழை பெய்யக் கூடும் என, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இன்று(08) பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 50ml வரை மேலதிக மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறலாம் என, வானிலை அவதான நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

புத்தளம், கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடற் பகுதிகளிலும் சிலவேளைகளில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

 

(rizmira)