பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு…

லிபியாவில் உள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 2 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 75 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லிபியா நாட்டின் பெங்காஜி நகரில் அல்-மஜோரி பெர்கா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசலில் நேற்று(09) தொழுகைக்காக பொதுமக்கள் கூடியிருந்த வேளையில், குறித்த பள்ளிவாசலில் புதைக்கப்பட்ட இரட்டை வெடிகுண்டுகள் திடீரென வெடித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் தொழுகைக்காக கூடியிருந்த அப்பாவி பொதுமக்களில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 75 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.