போட்டித் தொடரினை 2 -0 என்ற கணக்கில் தோல்வியடைந்த போதிலும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கை அணியானது தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணத்தினை மேற்கொள்ள உள்ள நிலையில் அப்போது, குறித்த தோல்விகளுக்கான பழியினை வாங்கவுள்ளதாக, கொழும்பு எஸ்.எஸ்.சீ மைதானத்தில் நேற்று(23) இடம்பெற்ற இறுதி டெஸ்ட் போட்டியின் நிறைவின் போது ஊடக சந்திப்பில் தென்னாபிரிக்க அணியின் தலைவர் பப் டு டுபிளேசி தெரிவித்துள்ளார்.
“இலங்கை அணியானது தென்னைபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது ஆடுகளம் எவ்வாறு இருக்கும்?” என வினவிய போது,
“மிகவும் சுழலக் கூடிய,வறண்ட ஆடுகளம்” (பப் டுபிளேசி சத்தமாக சிரிக்கிறார்)) “இல்லை…அது மிகவும் தெளிவானது….இக்காலங்களில் எல்லா அணிகளும் போட்டிகளில் வெற்றி பெறுவது குறித்தே அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.…
“எமது பக்கத்தில் இருந்து பார்த்தால் (ஆடுகளம்) கடந்த காலம் இலங்கை அணி வீரர்கள் விளையாடிய ஆடுகளம் போன்றே இருக்கும்….சுழற் பந்து அங்கு எடுபடாது என நினைக்கிறேன்.. என்றாலும் எமக்கு சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆதலால் எமக்கு சவால்கள் இல்லை..”