கூட்டு எதிர்க்கட்சிக்குள் தற்போது வரையில் பாரிய நெருக்கடி நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரையில் அமைதியாக இருந்த மஹிந்தானந்த அலுத்கமகே தற்போது இது தொடர்பில் ஊடகங்களின் ஊடாக தகவல் வெளியிட ஆரம்பித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிளவிற்கு முக்கிய காரணம் இரத்தினபுரியைச் சேர்ந்த பவித்ரா என மஹிந்தானந்த தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்களான பவித்திரா வன்னியாராச்சி மற்றும் பசில் ராஜபக்ஷ தற்போது இணைந்து செயற்படுகின்றனர். இருவரும் இணைந்து கூட்டு எதிர்க்கட்சியை அழிப்பதற்கான சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக மஹிந்தானந்த குற்றம் சுமத்தியுள்ளார்.
உருவாகவுள்ள புதிய கட்சியின் செயலாளர் பதவியை எதிர்பார்த்து கூட்டங்களை ஏற்பாடு செய்கின்ற பல பேரணிகளில், தான் உட்பட குழுவினர் கலந்துக் கொள்ளாமைக்கு இதுவே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவை ஏமாற்றும் பவித்ரா மற்றும் பசில் இணைந்து கூட்டு எதிர்க்கட்சியை அழிக்கு நாள் மிகவும் தூரத்தில் இல்லை. தான் எதிர்கால அரசியல் நிலைமை குறித்து ஆராய்ந்து உரிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.