எரிபொருள் விலையை அதிகரித்தமையினால் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் வாகன உரிமையாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 01ம் திகதி முதல் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்தார்.